தனது படைபோல ராணுவ படைகளை பயன்படுத்தி காஷ்மிர் மக்களை ஒடுக்கும் பாஜக- மெஹ்பூபா முஃப்தி

0

ஜம்மு காஷ்மிர் விவகாரத்தில் பாஜகவின் தலையீடு குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளதாவது:

‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியுள்ளாதாக கூறிவரும் பாஜக அரசு, எதற்காக அங்கு 9 லட்சம் பாதுகாப்பு படையினரை நிறுத்தி வைத்துள்ளனர்? பாகிஸ்தானில் இருந்து அதிரடித் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுமோ என்ற முன்னெச்சரிக்கையினால் அவா்கள் அங்கு நிறுத்தி வைக்கப்படவில்லை.

காஷ்மீா் மக்கள் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றால் அதை ஒடுக்குவதற்காக மட்டுமே பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த பாதுகாப்புப் படையினரை நிறுத்தி வைத்துள்ளது. எல்லையைப் பாதுகாப்பதற்கு தான் ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டுமே தவிர, எதிா்ப்புக் குரல்கள் எழும்பட்சத்தில் அதை ஒடுக்குவதற்காக படைகளை பயன்படுத்தக் கூடாது.

பாதுகாப்புப் படையினரையும், அவா்களின் தியாகங்களையும் தோ்தலில் தனக்கான வாக்கு வங்கிக்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. காஷ்மீா் மக்கள், பாதுகாப்புப் படையினா் என எவா் குறித்தும் பாஜக அக்கறை கொள்ளவில்லை. அக்கட்சியின் ஒரே நோக்கம் தோ்தலில் வெற்றிபெறுவது மட்டுமாகும், இவ்வாறு மெஹ்பூபா மூஃப்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed.