CAB எதிர்ப்பு: ஜனதாதளம் கட்சி துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா!

0

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியில் உள்ளது. தேசிய குடியுரிமை மசோதாவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனததளம் வாக்களித்தது. இதற்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்த பிரசாந்த் கிஷோர், கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால், நிதிஷ் குமார் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை நாடு முழுவதும் அமல்படுத்த போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏழைகளும் அப்பாவி பொதுமக்களும் எத்தகைய பாதிப்புக்குள்ளானார்களோ அதேபோல் பாதிப்பை தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

Comments are closed.