மதவெறியை தூண்டும் இந்திய பிரதமர் -மோடியை கடுமையாக சாடிய ஜப்பான் பத்திரிகை

0

பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவரது கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் முடங்கியுள்ளது என்று ஜப்பானின் ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ (Nikkei Asian Review) விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக மார்ச் 11ஆம் தேதி முகப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஏடு குறிப்பிட்டிருப்பதாவது: “2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், குஜராத் மாநிலத்தில் ஏற்படுத்திய பொருளாதார முன்னேற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால், முதல் 5 ஆண்டுகால ஆட்சியிலேயே, பணமதிப்பு நீக்கம்,ஜி.எஸ்.டி., உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மோடி நிலைகுலைய செய்துவிட்டார். இதனால் நாடு பல நெருக்கடிகளுக்கு  உள்ளானது என்றாலும், 2019இல் மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இப்போதும், பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, 2002இல் குஜராத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் உயிர்போனதற்கு காரணமான, மதவன்முறையை மீண்டும் செயல்படுத்த தொடங்கி விட்டார் பெரும்பான்மையை பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில், மதவெறியை தூண்டும் திட்டங்களை மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது.

கஷ்மீரின் சிறப்பு உரிமை பறிப்பு, இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம்போன்ற ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மதவெறி செயல்பாடுகள் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி செயலிழக்க செய்துவிட்டார்” என்று ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ ஏடு சாடியுள்ளது.

Comments are closed.