ஜார்கண்டில் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஜீன் டிரீஸ் கைது

0

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மற்றும் உயர்கல்வி ஆசிரியர் ஜீன் டிரீஸ் இன்று காலை ஜார்கண்ட் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஐக்கிய முற்போக்கு தேசிய ஆலோசனைக் குழுவில் இருந்த ஜீன் டிரீஸ் மேற்கு ஜார்கண்டில் உள்ள கர்வா எனும் ஊருக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை கைது செய்ய்யப்பட்டார்.

ஜீன் டிரீஸ் அதிகாரிகளிடமிருந்து அனுமதி இல்லாமல் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். டிரீஸுடன் சேர்ந்து இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

டிரீஸின் காவலில் வைக்கப்பட்டது குறித்து, பண்ணை ஆர்வலர் மற்றும் அரசியல் தலைவரான யோகேந்திர யாதவ் கூறியதாவது: “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சி! ஜீன் டிரீஸ் ஒரு பொருளாதார நிபுணர், சேரிகளில் வாழ்ந்த இவர் நோபல் பரிசு பெற தகுதியானவர். அனைத்து அதிகாரங்களையும் பெருமைகளையும் தகர்த்தெறிந்து, இந்திய குடியுரிமை பெற்றார். அவரை கைது செய்வதை விட ஒன்றும் அவமானமாக இருக்க முடியாது. ”

பொருளாதார நிபுணரான இவர் பசி மற்றும் பொது நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பசியின் பிரச்சனை பற்றி இந்த நவீன உலகித்திற்கு எடுத்துரைத்தார். அமர்த்தியா சென் எனும் புத்தகத்தை எழுதி நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆவார். 

தற்போது ஜான் ட்ரீஸ் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இல் கௌரவ பேராசிரியராகவும், ராஞ்சி பல்கலைக்கழகத்தில்  பேராசிரியராக பணிபுரிகிறார். அவர் முன்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் போதித்து வந்தார்..

கைது செய்யப்பட்ட ஜீன் டிரீஸ் மற்றும் இருவரை காவல்துறை பின்னர் விடுவித்தது.

Comments are closed.