ஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை!

0

கல்லூரி ஒபேராசிரியரின் மத துன்புறுத்தல்கள் காரணமாக சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ள நிலையில், திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்துள்ளார்.

கல்லூரியில் ஜெப்ரா பர்வீன் படித்து வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த இவர், திருச்சி கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் உள்ளது அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு  படித்துவந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவர் தங்கியிருந்த அறை தூக்கிலிட்டுகொண்டுள்ளார்.

போலீஸாரிடம் கல்லூரி நிர்வாகம், தற்கொலை செய்துகொண்ட மாணவி பள்ளிக்கல்வி வரை இந்தியில் படித்ததாகவும். தற்போது கல்லூரி பாடங்கள் ஆங்கில வழியில் நடத்துவதால், அவர் பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டார். ஆகையால் அதன்காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாகவும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த நிலையில், மாணவியின் மரணத்துக்கான காரணம் வேறு என்றும் விடுதி காப்பாளர் அவரை,  சக மாணவிகள் மத்தியில் வைத்து மோசமாகத் திட்டி அசிங்கப்படுத்தியுள்ளதால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று சக மாணவிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வருகிறது.

மனமுடைந்த மாணவி ஜெப்ரா, அவருடன் அறையில் தங்கியிருக்கும் தோழிகளில் ஒருவரான முதலாமாண்டு பி.காம் படிக்கும் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஆதிஃபாவிடம் சொல்லி அழுதுள்ளார். இந்த நிலையில், அடுத்தநாள் காலை 6.30 மணியளவில் தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால், கல்லூரி நிர்வாகம் 10.30 மணியளவில் போலீஸாருக் தகவல் கொடுத்துள்ளது. அதற்குள் மரணத்துக்கான காரணங்களை மாற்றியதுடன், அவருடன் அறையில் தங்கியிருந்த ஆதிஃபாவை கல்லூரி கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்.

தற்கொலைக்கு காரணம் என்னவென்று சரியாக  தெரியததால் போலிஸார் தீவிர விசாரணாய் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து முஸ்லிம் மாணவிகளின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

Comments are closed.