ஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்!

0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், (ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம்) ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும், (பாஜக – ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு – நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு) – ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி)) உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாக இணைவதாக அறிவித்தது.

இந்நிலையில்,  தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாததால் பாஜக கூட்டணி கட்சிகள் பிரிந்துள்ளன. ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐக்கிய ஜனதாதளம் முன்பே அறிவித்து விட்ட நிலையில்,  தற்போது ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் ஆகியவையும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளன.

Comments are closed.