குஜராத்தில் தலித்துகள் பாதுகாப்பாக இல்லை

0

குஜராத் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னெஷ் மெவானி வியாழன் அன்று, தலித் மக்களுக்கு எதிராக செயலாற்றிவரும் மத்திய அரசை கண்டித்து தாக்கி பேசியுள்ளார்.

குஜராத் மாநில காவல்துறை, தலித் மக்களுக்கு எதிரான நடைபெறும் அட்டூழியங்களை சகித்துக்கொள்ள முடியாது என்று கூற இயலவில்லை. மேலும் சமுதாயத்திற்கு ஒரு வலுவான செய்தியைக் கூட அவர்களால் வழங்க முடியவில்லை. இந்த அரசு தலித்துகளுக்கு எதிராகவும், சாதிக்கு ஆதரவாகவும் செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மெஹ்ஷானா தெருவிலுள்ள ஒரு பள்ளியிலிருந்து வந்த ஒரு தலித் சிறுவனை, ஒரு குழுவினர், கடத்திச் சென்று,  இரக்கமற்ற முறையில் மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

ஹோலி பண்டிகை காலத்தில், பாஜகவினர் தலித் மக்களின் இரத்தத்துடன் விளையாடி வருகிறது. தலித் மக்கள் அவர்களின் மீதுள்ள பயத்தின் காரணமாக வெளியில் சொல்ல முடியாத அளவிற்கும்,  அவர்களுக்கு எதிராக ஒரு புகார் பதிவு செய்ய கூட பயப்படுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் பேசுகையில், அடுத்த 48 மணி நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய விட்டால், ஒரு போராட்டத்தை தொடங்குவோம். “நாங்கள் வடக்கு குஜராத் மக்களை எதிர்த்து போராடுவோம். மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிய பாஜகவினரை அனுமத்திக்க மாடோம். என்றும் கூறினார்.

Comments are closed.