விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ரிஜ்வான் ஆசாத் போலீஸ் காவலில் உயிரிழந்தார்

0

காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ரிஜ்வான் ஆசாத். மார்ச் 17ஆம் தேதி ஆசாத்தின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் விசாரணைக்காக ஆசாத்தை அழைத்து சென்றனர்.

இந்தநிலையில் மார்ச் 19ஆம் தேதி, அவர் விசாரணையின்போது உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ரிஜ்வான் ஆசாத் எப்படி உயிரிழந்தார் என்ற காரணத்தை காவல்துறையினர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து தெரிவித்த ஆசாத் குடும்பத்தினர், ‘இது திட்டமிட்டப் படுகொலை.வீட்டிலிருந்த ஆசாத்தை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது எங்களை காவல்துறையினர் மிரட்டினர்’ என்று தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரர் முபஷிர், ‘ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்த காவல்துறையினர் வீடு முழுவதும் சோதனையிட்டனர். வீட்டிலிருந்த எங்கள் செல்போன்கள் மற்றும் இரண்டு லேப்டாப்களை பறிமுதல் செய்த பின்னர், ஆசாத்தையும் அவர்களுடன் அழைத்து சென்றனர்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவந்திபோரா மாநில எஸ்.பி தஹிர் சலீம் தெரிவித்ததாவது, ’காவல்துறையினர், ஆசாத்தை கைது செய்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆசாத் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியிலுள்ள மக்கள் ஆசாத்தின் வீட்டின் முன் வந்து குவிந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

Comments are closed.