JNU நஜீப் வழக்கு: ABVP யினருக்கு உண்மை கண்டறியும் சோதனையும் அதனை திசைதிருப்பும் முயற்சிகளும்

0

பாஜக மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யினரால் தாக்கப்பட்டு பின்னர் மாயமான மாணவர் நஜீப் வழக்கில் சந்தேகத்திற்கு இடமான மாணவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பை தெரிவித்த அந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு பாடியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வந்தது.

கடந்த 2016 அகோடோபர் மாதம் காணமல் போன நஜீப், குறித்த காவல்துறை விசாரணையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து நீதிமன்றம் காவல்துறையிடம் இது குறித்து கேள்வி எழுப்பி வேறு வழிகளில் இந்த விசாரணையை நடத்துமாறு கூறியது. தங்களுக்கு இதுவரை இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அதனால் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று காவல்துறை கூறியது.

இந்நிலையில் நஜீப் மறைவு குறித்து சந்தேகிக்கப்படும் மாணவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு வருமாறு காவல் துறையினர் சம்மன் அனுப்பியதும் ஒன்பது மாணவர்கள் காவல்துறையின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக அடுத்து மார்ச் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சுமித் தாஸ் 27ஆம் தேதி வழங்க இருந்த நிலையில், அந்த உத்தரவு இன்னும் தாயாராகவில்லை என்று கூறி தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி இந்த மாணவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுபவர், அவர் சம்மதிக்காத வரையில் இந்த உண்மை கண்டறியும் சோதனை சட்ட விரோதமானது என்றும், அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்றும் கூறினார்.

நஜீபை குறித்த எந்த ஒரு தகவலும் காவல்துறையினருக்கு இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறை இந்த முயற்சியில் இறங்க சில ஊடகங்களோ நஜீபை குறித்த அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. பிரபல செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆஃப் இந்தியா, காணமால் போன நஜீப் ஒரு ஐ.எஸ். ஆதரவாளர் என்று செய்தி வெளிய்யிட்டுள்ளது.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதளின் முகப்பு பக்கத்தில், ராஜ் சேகர் ஜா என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரை ஒன்றில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின்படி, நஜீப்பின் இணையதள வரலாறுகளில் அவர் ஐஎஸ் அமைப்பின் கொள்கைகள், அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் தொடர்புகள் குறித்தும் ஐ.எஸ். இயக்கத்தில் இணைவது எப்படி என்பது குறித்தும் ஆராய்ந்ததாக கூறி செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இது தொடர்பான அறிக்கையை டில்லி காவல்துறையினர் டில்லி உயர்நீதிமன்றத்தில் சமர்பித்ததாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இன்னும் இந்த செய்தியை பதிவு செய்த ராஜ் சேகர் ஜா, நஜீபை ஏ.பி.வி.பி. யினர் தாக்கிய சமயத்தில் இது தொடர்பான தகவல்களை தான் நஜீப இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார் என்று தனது கட்டுரையில் கூறயுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இந்த செய்தி வெளியானதும் அதன் உண்மைத்தன்மையை விசாரிக்காமல் பிற செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை வெளியிடத் தொடங்கியது. சில பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிய டில்லி காவல்துறையை தொடர்புகொள்ள காவல்துறையினர் இந்த செய்திகளை மறுத்துள்ளனர். இன்னும் அவர்களுக்கு நஜீபின் இணைய வரலாறு தொடர்பான எந்த ஒரு அறிக்கையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து டில்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர் மற்றும் டில்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் திபேந்திர பதக் கூறுகையில், “நஜீப் காணாமல் போன தினத்திற்கு முந்தைய நாள் அவர் கூகிள் மற்றும் யூடியூபில் ஐ.எஸ். உறுப்பினர்களின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருந்தார் என்றும் அதனால் அவருக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற செய்திகள் சில ஊடகங்களில் வெளியானதை கண்டோம். காவல்துறையினருக்கு அப்படியான எந்த ஒரு தகவலும் வரவில்லை. நஜீபிற்கும் ஐ.எஸ். இயக்த்திற்குமான எந்த ஒரு தொடர்பும் டில்லி காவல்துறை விசாரணையில் கண்டரியப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.

ராஜ் சேகர் ஜாவின் இந்த கட்டுரை இதுவரை விடை தெரியாமல் இருந்த நஜீப் வழக்கு தற்போது உண்மை கண்டரியும் சோதனையின் பக்கம் திரும்பியதும் அதனை திசை திருப்பி அவரது வழக்கில் சந்தேகிக்கப்படுபவர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதத்தில், இந்த செய்திக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் (அது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் மார்ச் 22 ஆம் தேதி பிரசுரிக்கப்பட்ட போதிலும்) இந்த செய்தியை குறிப்பிட்டு ABVP பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் நஜீபிற்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருக்கும் நிலையில் காவல்துறையினர் அது தொடர்பான விசாரணைகளில் ஈடுபடாமல் அப்பாவி மாணவர்களை உண்மை அறியும் சோதனை என்கிற பெயரில் துன்புறுத்துகின்றனர் என்று கூரியுள்ளது ABVP.

Comments are closed.