JNU பல்கலைகழக மாணவிகள் விபச்சாரிகளை விட மோசமானவர்கள் – ஹரியானா முதவரின் அதிகாரி

0

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அலுவலகத்தில் விஷேஷ பணியில் அமர்த்தப்பட்ட அதிகாரி ஜவஹர் யாதவ் என்பவர் ஜவஹரால் நேரு பல்கலைகழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளை விபச்சாரிகளைவிட மோசமானவர்கள் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை பதிவு செய்த அவர் பின்னர் தான் யார் மனதையும் புண் படுத்த இதனை கூறவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் தனது ட்வீட்டில் கூறியதாவது “என்னுடைய முந்தைய ட்வீட்டில் நான் மாணவிகளை விபச்சாரிகளுடன் ஒப்பிடவில்லை. நான் என்ன கூறினேன் என்றால், விபச்சாரத்தை தொழிலாக தேர்ந்தெடுத்த சகோதரிகள், ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்தில் தேச விரோத, பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களையும், காஷ்மீருக்கு விடுதலை கோரி கோஷங்களையும், கேரளாவின் கோஷங்களையும் போடுபவர்களை விட மேலானவர்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவிகள் இந்தியாவின் அழிவிற்கான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களாவது தங்கள் உடலை தான் விற்கிறார்கள், அவர்களின் தேசத்தை அல்ல” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ABVP அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியது இணையதளத்தில் பரவி வருகிறது. ஆனால் இந்த கோஷங்களை எழுப்பியதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவ அமைப்பின் தலைவர் கான்ஹையா குமாரை காவல்துறையினர் தேச விரோத குற்றத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் ABVP அமைப்பினர் பா.ஜ.க. எதிர்ப்பு மாணவர்களை காட்டிகொடுக்க அவர்களை காவல்துறையினர் பல்கலைகழக விடுதியில் புகுந்து கைது செய்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். இந்த கைது நடவடிக்கை முற்றிலும் பா.ஜ.க எதிர்பலைகளை ஒடுக்குவதற்காகவும் ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா மரணத்திற்கு எதிரான மாணவ போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க: ரோஹித் வெமுலா

Comments are closed.