JNU வில் தலித் மாணவர் தற்கொலை: நிறுவனக் கொலைகள் தொடர்கின்றதா?

0

ஹைதராபாத் பல்கலைகழக ஆய்வு மாணவரான ரோஹித் வெமுலா மரணத்திற்கு பிறகு அதே ஆதிக்க கட்டமைப்புக்கு மற்றொரு மாணவர் தனது உயிரை பலிகொடுத்துள்ளார். இந்த முறை JNU பல்கலைகழகத்தில் இந்த சோகம் நடந்துள்ளது.

ஹைதராபாத் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் வரலாற்று கல்வி மைய M.Phil மாணவனுமான 27  வயது முத்துகிருஷ்ணன் ஜீவானந்தம் என்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர் தனது நண்பரது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது நண்பரது வீட்டிற்கு மதிய உணவிற்காக சென்ற அவர் சிறிது நேரம் உறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மாலை அவரது நண்பர் அவரை அழைத்தும் அந்த அழைப்பிற்கு ஜீவானந்தம் பதில் தராததினால் காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். மாலை ஐந்து மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது அறையின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர்.

தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவராவார். இவர் கடந்த மார்ச் 10  ஆம் தேதி ரஜினி கிரீஷ் என்ற பெயருடைய தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை பதிந்துள்ளார். அந்த பதிவின் இறுதியில் எங்கும் சமத்துவமில்லை என்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் “சமத்துவம் மறுக்கப்படும் போது அனைத்தும் மறுக்கப்படுகிறது” என்று அவர் அந்த பதிவின் தொடக்கத்திலும் இறுதியிலும் குறிப்பிட்டுள்ளார்.

“There is no Equality in M.phil/phd Admission, there is no equality in Viva – voce, there is only denial of equality, denying prof. Sukhadeo thorat recommendation, denying Students protest places in Ad – block, denying the education of the Marginal’s. When Equality is denied everything is denied.”

முத்துகிருஷ்ணன் ரோஹித் வெமுலா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ரோஹித் வெமுலாவின் மறைவிற்கு பிறகு ரோஹித் குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த கருத்துக்கள் அதற்கு சான்று பகர்கின்றன. ரோஹித் வேமுலாவை தான் சந்தித்தது குறித்தும் அவர் சிறந்த தலைமைப் பண்பு உடையவர் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

muththu kirsihanan jeevaanantham

மேலும் அவர் தனது பதிவில், “தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அனைத்து அறிவுஜீவிகளும் கற்பனைக் கதாபாத்திரங்களை கேலி செய்ததன் காரணமாக கைது செய்யப்படுவார்கள். அதே நேரம் அனைத்து முன்னணி தேசிய கல்வி நிறுவனங்களுக்கும் 10 வகுப்பு தேர்ச்சியடைய முடியாதவர்கள் தலைமை வகிப்பார்கள். இவர்கள் தான் கருத்து வேறுபாடு கொண்டவர்களை தேச விரோதிகள் என்று கூறுகின்றனர். இவர்கள் மாட்டிறைச்சி உண்டதாலும், பகுத்தறிவுவாதியாக இருப்பதாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அறிவுரீதியில் உதவுவதாலும் நம்மைப் போன்ற பல ரோஹித்களை கொலை செய்யப் போகிறார்கள். ஆனால் நாங்கள் தான் இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள். நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டபிறகு தேசம் என்ற ஒன்றே இருக்காது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முத்துகிருஷ்ணனின் மறைவு குறித்து மறைந்த ரோஹித் வெமுலாவின் நண்பர் டொன்தா பிரசாத் கருத்து தெரிவிக்கையில், “எங்களுக்கு இது மிகவும் வருத்தமான செய்தி. நாங்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலேயே உள்ளோம். அவர் 2012 இல் ஹைதராபாத் பல்கலைகழகத்தில் சேர்ந்தது என் நினைவில் உள்ளது. ஆனால் அவருக்கு எப்போதுமே ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பயில வேண்டும் என்று ஆசை. அவர் பல முறை முயற்சித்து கடந்த வருடம் அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எங்களது தலித் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு செயல்பட்டவர் அவர். நாங்கள் புறக்கணிக்கப்பட்டு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட போது எங்களை அவர் தினமும் வந்து சந்திப்பது இன்னும் என் நினைவில் உள்ளது. அவரது மரணம் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு” என்று கூறியுள்ளார்.

இவரது மறைவை அடுத்து வருத்தங்களும் கோபங்களும் அடக்கிய பதிவுகள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை நிரப்பி வருகின்றது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் ஒருவர் முத்துகிருஷ்ணன் தன்னை அரசியலில் எப்போதும் இணைத்துக் கொள்பவர் என்றும் ஹைதராபாத் பல்கலைகழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் தலித் இயக்கங்களில் பங்கேடுத்துக்கொண்டவர், மிகவும் இனிமையான மகிச்சி நிறைந்தவர், கடின உழைப்பாளி என்று இவரை குறிப்பிட்டுள்ளார்.

முத்துகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவு கீழே:

“When equality is denied everything is denied. By saying Prof Sukhdeo thorat looking for the questions in the conference organized by UDSF in the SSS -1 Auditorium, behind Prof. Throat the white colour projector screen recalled Jeeva’s son memories about screen. From the 70mm new screen Jeeva’s son watching the Tamil Movie “Pithamagan”. After the movie ,the lights areon, screen became white, it was first day first show “Pithamagan”. Basically Jeeva’s son came to buy Maana in the Kitchippalyam , after the Dry fish flyover Maana market.

After packing Maana in the Black colour plastic bag Jeeva’s son Walks through Old bus stand road, then he hooks the right, right side Oreiental Shakthi theatre, after a while he reached Laxmi Ice cream shop. From the shop everyone looking at the black carry bag. It is very obvious that the big black colour carry bag is for only parcelling Maana those days. Suddenly people turns the faces. With that 5kg Maana parcel, Jeeva’s son reached Salem Old bus stand clock house, then he was waiting for Satthiram, Lee bazaar route buses, Suddenly one of his school friend Ramana came near to him, Ramana supposed to get down in the 4 Roads bus stop. 
Jeeva’s son thought, he can talk to Ramana till 4 Roads, but when the moment Ramana seen the Black carry bag, he started to look for some other bus, he did not even give face to him. Jeeva’s son entered inside the 6 A sathiram route bus. 

Middle of the bus right side window seat, Jeeva son watching the road side shops. Salem Collector Office, opposite situated the Salem Government Hospital bus stop. An officer entered inside the bus after looking at the Black Maana cover, the officer did not sit with Jeeva’s son though there was a place and no other vacancy in the bus. After the Government Hospital, the bus claimed the flyover, after the flyover, Klapana Theatre bus stop, which is opposite to the Salem Anna Park. From the Park a couple came into the bus, they were searching for seat to sit with their 3 year old kid. Jeeva’s son want to stand from 4 Roads to Sathiram Bus stop since there is nobody to talk with him, so for them he woke up and gave place, but both of them did not sit after seeing the Black carry bag, now the Maana smell broadcasted throughout the bus, nobody sat on the seat till 4 Roads.

After 4 Roads Jeeva’s son foot boarded with other passenger’s From 4 Roads to Thammannnan Chetty road, other passenger’s angry on him just for the Maana bag, now the smell is very clear, some crushed him on the foot. Jeeva’s son walked through the Sathiram to Lee bazar road. Jeeva’s son intent to walk right side, to see the people’s reaction. Many people turned aside, and crossed opposite side, after seeing the Maana carry bag. In those days there was no equality for Maana, but nowadays there is no maana , that is to say there is no equality.

There is no Equality in M.phil/phd Admission, there is no equalitiy in Viva – voce, there is only denial of equality, denying prof. Sukhadeo thorat recommendation, denying Students protest places in Ad – block, denying the education of the Marginal’s. When Equality is denied everything is denied.”

அவரது பக்கத்தில் சென்று படிக்க: கிளிக் செய்யவும்

 

Comments are closed.