ஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்!

0

டெல்லி ஜவகர்லால் நேரு (ஜே.என்.யு) பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையில், தகாத வார்த்தைகள் எழுதப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சீர்குலைக்கும் வேண்டுமென நோக்கில், மதவாத குமபல் தங்களது வேலையை செய்ய துவங்கிவிட்டது. மத்திய பாஜக அரசு தங்களது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, மாணவர்களுக்கு விடுதி கட்டண உயர்வு, பல்கலைக்கழக பிரிவுகள் தனியார்மயம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து செயல்பட்டால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாணவர்களை அடக்கி வருகிறது. ஆனால் இதனை மீறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், மதவாத கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலையை சேதப்படுத்தி, அதன் அருகில் தகாத வார்த்தைகளை எழுதி கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

இதற்கு ஜே.என்.யு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Comments are closed.