கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா

0

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இது இந்தியாவின் பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியை குறைக்கும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன.

சர்வதேச தரமதிப்பீடு நிறுவனமான FITCH, முன்னர் அறிவித்த 5.6 சதவிதம் என்ற இந்தியாவின் வளர்ச்சியை 5.1 சதவிதமாக குறைத்துள்ளது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்களின் முதலீடுகளை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியே எடுத்து செல்வது, இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. ஒட்டுமொத்த உலக பொருளாதாரமே, 1.5 சதவிதம் அளவிற்கு சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, சுமார் இரண்டரை கோடி பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, சுமார் இரண்டரை கோடி பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.5 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவால், 8.5 சதவித வட்டியை கூட வழங்க முடியாத நிலை இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments are closed.