பாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி

0

ராகுல் காந்தி அவரது தொடர் ட்விட்டர் பதிவுகள் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் கையில் சிக்கி பொய்யான தகவல்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வெறுப்பு பிரச்சாரங்களே அதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகள், வாட்ஸ் அப்கள் என அனைத்திலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், “ஊடகங்கள் பொய்யான கதைகளை கட்டவிழ்த்து விடுவதால் நாடு துண்டாடப்படும் நிலை உறுவாகியுள்ளது” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லடாக்கில் சீன “ஊடுருவல்” குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சீன ஊடுருவல் விவகாரத்தில் ஊடகங்கள் குழப்பமடைந்து, பயந்து போகின்றன. லடாக்கில் என்ன நடக்கிறது? என்று ஊடகங்களுக்கு தெரியும். எனினும் அவர்கள் மெளனமாக உள்ளனர்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.