அதிமுக அரசின் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கைது

0

சென்னையில் ஆண்டுதோறும் YMCA மைதானத்தில் நடைபெறும். அதே போல் இந்தாண்டுக்கான புத்தக கண்காட்சி ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது.

இதில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் மக்கள் செய்தி மையம் என்ற அவரது அரங்கத்தில் தனது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்.  அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாக புத்தக கண்காட்சியை நடத்தும் தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் “புத்தகக் காட்சியில் கலந்து கொள்ள உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதனால் அரங்கத்தை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று கூறிப்பிடப்பட்டுள்ளது.

கடையை அகற்ற மறுத்ததாக கூறி அன்பழகன் மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து அன்பழகனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 24ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பபாசியின் புத்தக கண்காட்சிக்கான விதிமுறைகளில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்படவில்லை.

Comments are closed.