நீதித்துறையை அவமனம்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டுள்ளது.
கடந்த 14ஆம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தற்போது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் வாதிகளால் நியமிக்கபட்டவர்கள், அரசியல்வாதிகளின் கால்களை பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். ஊழல் செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை. தகுதி உடையவர்கள் நீதிபதிகளாக வந்தால் இதுபோன்று நடைபெறாது என குருமூர்த்தி பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் நீதித்துறையை களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் முறையீடு செய்துள்ளார்.
இந்த முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறித்தியுள்ளனர்.