“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்

0

மன்னிப்பு கேட்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணின் ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று 14ம் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால், உடனடியாக அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.

அவருக்கு தண்டனை அறிவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதங்களின்போது அவர் மன்னிப்பு கேட்க மறுத்தார். அவரது கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு அவருக்கு 2-3 நாள்கள் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் இன்று மீண்டும் மன்னிப்பு கோர பிரசாந்த் பூஷண் மறுப்பு தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோருவது மனசாட்சிக்கு துரோகம் விளைவிப்பது போன்றது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.