அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் கஷ்மிரிகள்- கபில் சிபல்

0

ஜம்மு கஷ்மிர் மாநிலத்தில் அவசர காலக்கட்டத்தின்போது என்ன நடந்தது?’ என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கறிஞர் கபில் சிபல் கஷ்மிர் நிலவரம் குறித்து முன்வைத்த வாதத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, அவசர காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினார்.

“ஒரே சமயத்தில் 70 லட்சம் மக்கள் இவ்வாறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இதுவரை இருந்ததில்லை என்று கபில் சிபல் வாதிட்டார்.

இதற்கு உச்சநீதிமன்ற அமர்வின் நீதிபதி எஸ்.வி.ரமணா பதில் அளிக்கையில், “1970களில் என்ன நடந்ததோ, அதுதான் அவசர காலத்தில் நடந்தது, என்று கேள்வி தெரிவித்தார்.

பின்னர் பேசிய கபில் சிபல், ‘ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 மாதங்களாக முழு அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன? எனவே அவசர நிலையில் 352ஆம் சட்டப்பிரிவின் கீழ் எதுவெல்லாம் அனுமதிக்கப்படாதோ அது 144ஆம் பிரிவின் கீழும் அனுமதிக்கப்படாது. அரசு அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியாது. வர்த்தகங்களை அரசு எடுத்துக் கொள்ளலாம், ஆனால் வர்த்தகத்தையே முடக்க கூடாது? ஜம்மு கஷ்மிர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூற முடியுமா?

எனது உரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கலாம் ஆனால் கட்டுப்பாடுகளின் நடைமுறைகளின்படி என் உரிமையையும் அனுமதிக்க வேண்டும்? அரசுதான் மக்களைக் காக்க வேண்டும். அரசு தான் காக்க வேண்டிய உரிமையை என்னிடமிருந்து எப்படி பறிக்க முடியும்? என்று கபில் சிபல் தன் வாதத்தை முன் வைத்தார்.

இதனையடுத்து அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

Leave A Reply