பால்கனி அரசாங்கத்திற்கு கமல்ஹாசன் அறிவுரை!

0

பசியினால் மக்கள் மடிந்து போவதும், உணவுப் பொருட்கள் வேண்டிய போராட்டத்தில் ஈடுபடுவதும் கொரோனா பரவலை விட முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய மோடி அரசாங்கம் செயல் இழந்துவிட்டது. மார்ச் 22 அன்று ஒரு நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதற்காக பால்கனியில் நின்று கைதட்டி ஆரவாரம் செய்யுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை கூறினார். மக்களுக்காக பணியாற்றும் மருத்துவர்கள், மக்கள் நல பணியாளர்கள் ஆகியோருக்கு இதை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். ஆனால் மோடி சொன்னதை செய்த மக்கள், இந்த மக்கள் நலப் பணியாளர்களை கிஞ்சிற்றும் மதிக்கவில்லை. சென்னையில் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அந்த சடலத்தை மயானத்தில் வீசி சென்றனர்.

இது ஒருபுறம் என்றால், 21 ஒருநாள் ஊரடங்கின் போது தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, பால்கனியில் நின்று விளக்கு ஏற்ற கூறினார். ஆனால், மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த வெளிச்சத்தையும் அவர் காட்டவில்லை. இதன் விளைவு என்னவானது. நேற்று மும்பையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றும் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது, எனவே தங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வேண்டும் என்றும் கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கரோனா பரவும் இந்த சூழ்நிலையில், பால்கனியில் இருந்து கையை தட்டிய, விளக்கு பிடித்த மக்களே, தரையில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பாருங்கள். முதலில் டெல்லி, இப்போது மும்பை. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி (Migrant Crisis) என்பது ஒரு டைம் பாம் போல, இது கொரோனாவை விட பெரிய நெருக்கடியாக மாறி வெடிப்பதற்கு முன் தடுக்கப்பட வேண்டும் என்று ட்டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.

Comments are closed.