“இந்தியா சாவர்க்கர் நாடாக மாறிவிடக் கூடாது”- கன்னையா குமார்

0

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களின்போது போலிஸார் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் போலிஸார் மாணவர்களை வெறிகொண்டு தாக்கியனர்.

இந்நிலையில், பீகார் பூர்னியா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்த ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “எங்களை நீங்கள் குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம். நாடாளுமன்றத்தில் வேண்டுமானால் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது.

இந்த போராட்டம் இஸ்லாமியர்களுக்கான போராட்டம் அல்ல; இந்தியா ஒரு சாவர்க்கர் நாடாக மாறிவிடக் கூடாது என்பதற்கான போராட்டம். அரசியலமைப்பை காப்பாற்றுவதற்காக நாம் மேற்கொண்டிருக்கும் சண்டை இது. அமைதியாகப் போராடி நம் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.” என பேசினார்.

Comments are closed.