கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..!

0

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மைசூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீர் செய்த் மீது அடையாளம் தெரியாத மர்மநபர் கூர்மையான கத்தியால் குத்தினார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ தன்வீர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்எல்ஏ மீது கத்தியால் குத்திய மர்ம நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed.