கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசதுரோக வழக்‍கு

0
நாடாளுமன்ற தேர்தலின் போது மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீடுகளில், கடந்த மார்ச் மாதம் 27, 28ஆம் ஆகிய தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடைபெறுவதற்கு முன்னதாக, இதுதொடர்பாக ஊடகங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் குமாரசாமி, சித்தராமையா. முன்னாள் அமைச்சர்கள் பரமேஸ்வரா, டி.கே.சிவகுமார் மற்றும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்‍கு தகவல் தெரிவித்ததோடு, போராட்டமும் நடத்தியதாக சமூக ஆர்வலர் மல்லிகார்ஜூன் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.
அவரின் புகாரை ஏற்றுக்‍கொண்ட பெங்களூரு நகர போலீசார், குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோர் மீது தேசத்துரோகம், அவதூறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.