“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

0

பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளயது.

பெங்களூருவில் பாஜக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, கர்நாடகாவில் பாஜக விற்கு வாக்களிக்க இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக தன்னிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களுக்கும் பாஜகவில் இணைய விருப்பம் உள்ளதாக தெரிவித்ததாகவும், ஆனால் தங்கள் தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது என்பதால் அந்த முடிவை எடுக்கவில்லை என அவர்கள் கூறியதாகவும் தெரிவித்த அவர், தனது தொகுதியில் 50 முதல் 55 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளதாகவும், இதுவரை அவர்களிடம் வாக்குகளுக்காக கையேந்தியதில்லை என்றும் அப்படி இருந்தும் தான் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் யாரெல்லாம் பாஜகவிற்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் என்றும் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கர்நாடக பாஜக அமைச்சர் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்வரப்பா பேட்டி மொழிபெயர்ப்பு:

பாஜக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்தபோது அவர்களுக்கும் பாஜகவில் இணைய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் ஊரில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய வாக்குகள் இருப்பதால் பாஜகவில் இணைந்தால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலேயே எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தார்கள். நான் அவர்களிடம் கூறினேன் எனது தொகுதியில் குருபா சமூகத்தைச் சேர்ந்த வாக்குகள் 10 ஆயிரம் மட்டுமே உள்ளது. ஆனால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த வாக்குகள் 50 முதல் 55 ஆயிரம் வரை உள்ளது. இதுவரை இஸ்லாமியர்களிடம் சென்று கையேந்தி ஏதோ வாக்கு சேகரித்ததோ கிடையாது. அப்படி இருந்தும் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஏன் இதை கூறுகிறேன் என்றால் எந்த இஸ்லாமியர் இந்திய நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளாரோ அவர் பாஜகவிற்கு வாக்களிப்பார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் இஸ்லாமியர்களே பாஜக விற்கு வாக்களிக்க முன்னும் பின்னும் யோசிப்பார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்

Comments are closed.