ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி

0

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்த மத்திய அரசு 370வது பிரிவையும் நீக்கியது.

இந்தநிலையில்,ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியதாவது:

‘‘காஷ்மீரில் அனைத்து பணிகளும் ஒரு சில குடும்பங்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் லட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் இன்னமும் எந்த பயனையும் அடையாமல் போராட்டத்தில் வாழ்கின்றனர்.

காஷ்மீரை பொறுத்தவரையில் இனிமேல் இரண்டே பாதை தான். ஒன்று அமைதி, மற்றொன்று வளர்ச்சி. இதற்கு இடையூறு செய்பவர்கள் கடுமையான நடவடிக்கையை சந்திப்பார்கள். அவர்களுக்காக இந்தியாவில் ஏராளமான சிறைகள் உள்ளன’’ எனக் கூறினார்.

Comments are closed.