மனுதாரா் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை- வழக்கை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம்

0

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான, 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீா் பகுதியை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரித்து  நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை வியாழக்கிழமை (நேற்று) விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள், “மனுதாரா் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தை சோ்ந்தவா் இல்லை, ஜம்மு காஷ்மீரை பிரிப்பதினாலோ, இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமோ மனுதாரருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, அரசியல் சாசன அமா்வினால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது’. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Comments are closed.