கஷ்மிரில் கைதான 500க்கும் மேற்பட்ட சிறுவர்களின் கதி என்ன…?

0

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து ஜம்மு கஷ்மிர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்பு படையினரால் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவர்களின் நிலை என்ன என்பது பற்றி விசாரிக்குமாறு, ஐம்மு கஷ்மிர் உயர்நீதிமன்றத்தின் சிறார் நீதிக்குழுவினருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல் போன சிறுவர்களின் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளின் நிலை குறித்து மிகுந்த கவலையிலும், அச்சத்திலும் நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு படையினர் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து ஒரு பொது நல மனு ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி என்.வி. ரமணாவின் தலைமையிலான அமர்வின் முன்,  அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது,  விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், “சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பின், ஜம்மு கஷ்மிரில், பாதுகாப்புப படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களின் நிலை தற்போது என்ன என்பதை பற்றி விசாரிக்க வேண்டும்.

அந்த விசாரணை தொடர்பான அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments are closed.