காஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை!

0

வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் ஏராளமான புதிய கட்டுப்பாடுகளை நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

ஜம்மு காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் நீக்கியது. ஜம்முஇ காஷமிர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மிர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அறிவத்தது.

இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் எனும் பேரில் பாதுகாப்பு படையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகள் 40 நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், தொழுகையின் போது சிலர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால், ஸ்ரீநகரின் 144 தடை உத்தரவை  அமல்படுத்திப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீநகர், நோவாட்டாவில் உள்ள பிரபலமான ஜாமியா மஸ்ஜித், ஹஸ்ராத்பால் பகுதியில் உள்ள தர்ஹா ஷெரீப் ஆகிய பகுதிகளில் தொழுகை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம்போல் இன்றும் முழுமையாக முடங்கியுள்ளது. அரசுப் பேருந்துகள் இயக்கவும் காவல்துறையினர் தடை விதித்துள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Comments are closed.