காஷ்மிர் குறித்து நாடு முழுவதும் பொது கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்!

0

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய மக்களுக்கு விளக்கும் வகையில் நாடு முழுவதும் பொது கூட்டங்களை பாஜக நடத்த திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்தால் இந்தியாவுக்கு ஏற்பட உள்ள நன்மைகள் குறித்து பாஜகவினர் அடுத்த மாதம் நாட்டின் பல்வேறு நகரங்களில் பொது கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்த இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள், பாஜக உறுப்பினர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் இந்த பொது கூட்டங்களில் கலந்து கொண்டு விளக்கவுரை அளிக்கவும்,  இதற்கான ஏற்பாடுகளில் பாஜக ஈடுப்பட்டு வருகிறது.

மேலும் காஷ்மிரிலுள்ள ஸ்ரீநகர் உட்பட 9 முக்கிய நகரங்களில் பாஜக சார்பில் பிரச்சாரங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.