இயல்பு நிலைக்கு திரும்புங்கள்: காஷ்மீர் மக்களை கெஞ்சும் மத்திய அரசு!

0

காஷ்மீர் மக்களை இயல்பு நிலைக்கு திரும்புமாறு அம்மாநில அரசு செய்தித்தாளில் விளம்பரங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்த விளம்பரங்களில், நாம் பயங்கரவாதிகளுக்கு அடிபணிய போகிறோமா? கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர்.

மக்களை ஏமாற்ற பயங்கரவாத அச்சுறுத்தலை பிரிவினைவாதிகள் பயன்படுத்தினர். தற்போது அதே வழியை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இதை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? இது போன்ற அச்சுறுத்தல்கள் நமது தொழிலை, வாழ்வாதாரத்தை, கல்வி உரிமையை, குழந்தைகளின் எதிர்காலத்தை, காஷ்மீரின் வளர்ச்சியை கெடுக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? காஷ்மீர் நமது வீடு. நமது நலன் மற்றும் வளம் பற்றி நாம்தான் சிந்திக்க வேண்டும். இதற்கு பயம் ஏன்? என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் ‘அரசின் இந்த விளம்பரங்கள் வழக்கமான கட்டுக்கதையே’ என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் சோஜ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகள் தற்போது வரை நீடித்து வருகிறது. ஆனால் பாஜக அரசு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறி வருகிறது.

Comments are closed.