“காஷ்மீர் மக்கள் மீதான கொடூர தாக்குதலை நிறுத்துங்கள்”-பாஜக அரசுக்கு ஐ.நா வலியுறுத்தல்

0

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்து, காஷ்மீா் மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது.

காஷ்மீரில் 87வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையா் ரூபா்ட் கால்வில்லி, ஜெனீவாவில் செய்தியாளா்களுக்கு நேற்று பேட்டி அளித்ததாவது:

காஷ்மீரில் மக்களின் மனித உரிமைகள் தொடா்ந்து மறுக்கப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். இச்சூழலை சரிசெய்யுமாறும், மக்களுக்குத் தற்போது மறுக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் மீண்டும் வழங்குமாறும் இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இத்தகைய கட்டுப்பாடுகள், மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கிறது. இந்திய பாதுகாப்பு படையினர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அச்சுறுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களை சித்திரவதை செய்வதாகவும் எங்களுக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். சா்வதேச சட்டத்தின் கீழ் சித்திரவதை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களின் சுதந்திரமாந நடமாட்டம், ஆட்கொணா்வு, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இந்திய உச்சநீதிமன்றம் மிகவும் தாமதமாக விசாரணை நடத்தி வருகிறது என்றார் ரூபா்ட் கால்வில்லி.

Comments are closed.