கேரளா: மோசடி வழக்கில் சிக்கிய பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன்

0

பாஜக மூத்த தலைவர் கும்மணம் ராஜசேகரன் உள்பட 8 பேர் மீது கேரள காவல்துறை மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

காவல் நிலையத்தில் புகார் அளித்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், “கடந்த 2018 அக்டோபர் முதல் ஜனவரி 2020ஆம் ஆண்டுவரை பல்வேறு சமய்ங்களில் ரூ.30 லட்சம் கும்மணம் ராஜசேகரன் உள்ளிட்ட 8 பேர் என்னிடம் பெற்றனர். பாலக்காடு மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் என்னை பங்குதாரராக சேர்ப்பதாகக்கூறி இந்த பணத்தை என்னிடம் பெற்றனர். இந்த நிறுவனத்தில் பங்குதாரராகச் சேரந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று என்னிடம் கும்மணம் ராஜசேகரன் கூறினார்.

இந்த வழக்கு குறித்து கும்மணம் ராஜசேகரன் கூறுகையில் “ஹரிகிருஷ்ணன் கூறுவதுபோல் நான் அவரிடம் முதலீடு செய்வது குறித்து ஏதும் பேசவில்லை. அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில் இவ்வழக்கு என்மீது போடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “ராஜசேகரன் கூறுவதுபோல் அரசியல் ரீதியாக போடப்பட்ட வழக்கு அல்ல. கேரள அரசு ஒருபோதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் யார் மீதும் வழக்கு தொடராது. அரசியல் ரீதியாக பழிவாங்குவது எங்கள் நிலைப்பாடும் அல்ல. குற்றச்சாட்டு ஆதாரங்கள் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Comments are closed.