“கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது”-பினராயி விஜயன் திட்டவட்டம்

0

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் நாடு முழுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு அரசு, இந்த சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என கடந்த ஆண்டு கூறியது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளாவாகும்.

முன்னதாகக உள்துறை அமைச்சர் அமித்ஷா “கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணி இந்தியாவில் தொடங்கியுள்ளாது, தடுப்பூசி முடிவுக்கு வந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம்” என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மேற்குவங்க மாநிலத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.