கொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

0

கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு ஏப்ரல் 6ஆம் தேதி வரை புதிய வரிகள் விதிக்கக் கூடாது, வங்கி கடன்களை வசூலிக்க  கூடாது’ என கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு  மக்களுக்கு அரசு அதிகாரிகள் வரி விதிப்பது, வங்கி கடன் வசூலிப்பது ஆகியவற்றை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 6ஆம் தேதி வரை வரி, வங்கி கடன் வசூலிப்பு கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில் கேரள அரசும் கொரோனா பாதிப்புக்காக முக்கிய சலுகைகளை அளித்தது. அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால், கேரள அரசின் இந்த சலுகைகளுக்கு தடைவிதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு மனு அளித்தது. இந்த மனு நீதிபதிகள் கன்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய பாஜக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு அதிகாரிகள் உணர்ந்துள்ளனர்.  ஜிஎஸ்டி உட்பட பலவித வரிகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ஆனால் கேரல உயர்நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க கூடாது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை புதிய வரிகள் விதிக்கக்கூடாது என்ற கேரள உயர்நீதிம்னற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’’ என்றார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது.

Comments are closed.