ஆர்.எஸ்.எஸ்-பாஜகவை எச்சரித்து வீட்டு வாசலில் போர்டு வைத்த கேரள மக்கள்!

0

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதம் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கேரளாவில் பாஜக – ஆர்.எஸ்.எஸ் வரக்கூடாது என பொதுமக்கள் வீட்டின் முன் போர்டு வைத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பாஜக அரசின் CAA குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளா மாநிலத்தில் அமல்படுத்த போவதில்லை என அம்மாநில  முதலமைச்சர் பினராய் விஜயன் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் பல்வேறு மாணவ அமைப்புகளும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநில பாஜகவினர் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக வீடு வீடாக சென்று விளக்கமளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தனர். கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் CAAக்கு எதிரான வாசகங்கள் எழுதிய போர்டுகளை பொருத்தி எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.

மேலும் அதில் ‘குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க ஆர்.எஸ்.எஸ் – பாஜக யாரும் உள்ளே வர வேண்டாம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.