கொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு

0

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து கேரளாவை மீட்டு வர பல்வேறு திட்டங்களான தொழில்துறை,  போக்குவரத்து துறை உட்பட ஏழை மக்களுக்கு சலுகை அளிக்க கூடிய முறையில் திட்டங்கள் மேர்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:-

கேரளாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.20 ஆயிரம் கோடிக்கு சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கொரோனாவால் வருமானம் இழந்து நிற்கும் மக்களுக்கு கடன் வழங்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாத ஓய்வூதியம் சேர்த்து வழங்கப்படும். இதற்காக ரூ.1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவச ரே‌ஷன் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படும். உணவகங்களில் ரூ.20க்கு மதிய உணவு வழங்கப்படும். கேரளாவில் அவசர சுகாதார திட்டங்களுக்கு ரூ.500 கோடியும்,

தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். பஸ்களுக்கும் வரிச்சலுகை வழங்கவும், பொதுமக்களுக்கு  மின்சாரம், குடிநீர் கட்டணத்தை அபராதம் இல்லாமல் கட்ட ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளா அரசின் இந்த திட்டமானது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, அம்மாநில முதல்வர்  பினராயி விஜயனுக்கு, மோடியின் பிரதமர் பதவியை வழங்கலாம் எனவும் நெட்டின்கள் கருத்து தெரிவித்துள்னர்.

இந்நிலையில், கேரள அரசின் கொரோனா சலுகைளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செய்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.