காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான வேறுபாடு குறைந்து வருவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், “திக்விஜயா சிங் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை அளித்துள்ளார். கேரளாவிலும் இதே போல் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் செய்துள்ளார். இத்தகைய நடவடிக்கை ஆர்.எஸ்.எஸ்-ஸை ஏற்றுக்கொள்வதற்கு சமம் என்பதை காங்கிரஸ் உணர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான திக்விஜய் சிங் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.