CAAக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய விருதை புறக்கணித்த கேரள திரைப்பட இயக்குநர்!

0

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ்அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது ஐஜி பதவியை ராஜினாமா செய்தார். எழுத்தாளரும், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் உருதுத்துறை தலைவருமான பேராசிரியர் யாகூப் யாவர், உத்தரப்பிரதேச அரசு வழங்கிய அகாடமி விருதைத் திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில், ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ (Sudani from Nigeria) என்ற மலையாளப் படத்ததிற்காக தேசிய விருது பெற்ற- கேரள இயக்குநர் ஜகரியா முகம்மது, தேசிய விருது விழாவையே புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இயக்குநர் ஜகரியா தனது முகநூல் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நானும் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படக் குழுவினரும்- எழுத்தாளர் முஹ்சின் பராரி மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, தேசிய திரைப்பட விருது விழாவில் இருந்து விலகி இருப்போம்” என்று அறிவித்துள்ளார்.

Comments are closed.