கேரளாவில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை!

0

கேரள மாநிம்  திருவனந்தபுரத்தில் கடந்த வாரம்  ஒரு கும்பல் வன்முறை நடைபெற்றுள்ளது. திருவல்லம் என்ற ஊர் பேருந்து நிலையத்தில் மலப்புறம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது கைப்பையை ஒருவர் திருடிச்சென்றுவிட்டதாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, திருடியவர் யார் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியாதபோது, திருடப்பட்ட நபரை தங்களுக்கு நன்கு தெரியும் என கூறி முட்டக்காடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்ற நபரை ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், அஜீஸை ஒரு வீட்டிற்குள் அழைத்து சென்று கொடூரமாக அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் அந்த நபரின் அந்தரங்க பகுதியிலும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அஜிஸ் அங்கேயே உயிரிழந்துவிட்டார். தாக்குதலுக்கு பிறகு திருவல்லம் பகுதியில் உள்ள வயலில் அஜீஸின் உடலை தூக்கி எறிந்து சென்றுவிட்டனர்.

இத்தகவலை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்திற்கு போலிஸார் விரைந்தனர். அஜீஸின் உடலை மீட்டு பரிசோதித்ததில் அவரை சித்ரவதை செய்து தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்பாவி இளைஞரை திருடன் என பொய் பழி சுமத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் மூவரூம் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மூவரையும் போலிஸ் கைது செய்துள்ளது.

Comments are closed.