கேரள மாநில ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆரீப் முகமது கான் நியமிப்பு!

0

கேரளாவின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆரீப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கடந்த 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.  இவர் கடந்த 2013-14ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவருடைய பதவி காலம் வரும் 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் நேற்று கேரளவின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆரீப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரீப் முகமது கான் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக இருந்தார். இவர் 1986ஆம் ஆண்டு முத்தலாக் தொடர்பாக சட்டம் இயற்ற முடிவு எடுத்த போது காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். தற்போது நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆரீப் முகமது ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.