‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி

0

மோடி அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவி தொகையில் நடந்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கிசான் திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தி போலியான விவசாயிகளின் பெயரில் ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்காக ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற முறகேடுகள கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 13 மாவட்டங்களில் இந்த பிரச்சினை உள்ளது. தகுதியுடைய 41 லட்சம் விவசாயிகள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இந்த நான்கு மாத காலத்திற்குள் இது 46 லட்சமாக உயர்ந்தது. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. குறுகிய காலத்தில் இத்திட்டத்தில் பணம் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. இத்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு நடந்த இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டை, குடும்ப அட்டை கொண்டு தானாக பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு கூறியதால்தான் இந்த தவறு நடந்துள்ளது. இதனால்தான் இந்த பிரச்சினை எழுந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் எடப்பாடி.

Comments are closed.