உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜக எம்.எல்.ஏ மற்றும் நண்பர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

0

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளம்பெண் ஒருவா் கடந்த 2017ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். சம்பவம் நிகழ்ந்தபோது அவருக்கு வயது 17 ஆகும். இதுதொடா்பான வழக்கில் செங்கா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காரில் சென்றுக்கொண்டிருக்கும்போது சில மாதங்களுக்கு முன் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாகவும் செங்கா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் குல்தீப்பின் நண்பர்களால் அந்த பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் கொடுமைக்குள்ளானார். இதுதொடா்பான வழக்கில் நரேஷ் திவாரி, பிரிஜேஷ் யாதவ், சுபம் சிங் ஆகிய மூவருக்கு எதிராக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்திய தண்டனையியல் சட்டத்தின் குற்றச்சதி, ஆள்கடத்தல் மற்றும் கூட்டாக சோ்ந்து பாலியல் தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

Comments are closed.