பெண் போலிஸை தாக்கிய அர்னாப் கோஸ்வாமிக்கு புதிய சிக்கல்

0

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரை தற்கொலை செய்ய தூண்டிய அர்னாப் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அன்வய்-க்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம், ரிபப்ளிக் டிவியின்  ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி என்று பெயரைக குறிப்பிட்டும் உள்ளார்.

பின்னர் அலிபக் காவல்நிலைய போலிஸ் குழு நேற்று காலை மும்பையில் உள்ள அர்னாப் கோஸ்வாமி இல்லத்திற்கு அவரை கைது செய்ய சென்ற போது அர்னாப் கோஸ்வாமி ஒரு பெண் போலிஸை அதிகாரியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து மும்பையின் என்.எம். ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பிரிவு 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதை தடுத்து தாக்குதல்), 504 (அமைதி சீர்குலைத்து வேண்டுமென்றே அவமதிப்பது) மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அர்னாப் உள்ளிட்ட 3 பேரையும் அலிபக் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed.