இடஓதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் கண்டனம்

0

இடஓதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் கண்டனம்
மாநில அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை, பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுப் பணித்துறையில் காலியாக இருந்த உதவிப் பொறியாளர் பணியிடங்களை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு (Scheduled Castes, Scheduled Tribes) SC & ST இடஒதுக்கீடு அளிக்காமல் நிரப்புவதற்கு  அந்த மாநில அரசு கடந்த 2012ம் ஆண்டு முடிவு செய்தது.அரசின் இந்த முடிவை எதிர்த்து, உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “முதலில் சம்பந்தப்பட்ட துறையில்SC & ST சமூகத்தின்ர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறார்களா என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும்.

அதன்பிறகு, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்று அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகண்ட் மாநில அரசு சார்பிலும், ஆதரித்து பல்வேறு தரப்பினருரும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் கீழ் கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.

அரசு வேலை வாய்ப்புகளிலும், பதவி உயர்விலும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம். கட்டாயம் இல்லை என்று தீர்ப்பளித்தது.பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான சமூக நீதி உரிமையை நிலைநாட்டிட இடஒதுக்கீடு தொடர வேண்டியது அவசியம் என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

(Scheduled Castes, Scheduled Tribes) SC & ST
Supreme Court
reservation state government

Comments are closed.