நூறு நாட்களுக்கும் மேலாக வீட்டு சிறையில் கஷ்மிர் தலைவர்கள்: கையெழுத்திட்டால் மட்டுமே விடுதலை!

0

கஷ்மிருக்கான மாநில அந்தஸ்தையும், அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளையும் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரத்து செய்து கஷ்மிர் மக்களை முடக்கிவைத்தது. 4 மாதங்களாக உள்ள நிலையில் கஷ்மிர் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

இதனால் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்தில் கஷ்மிரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லாஹ், உமர் அப்துல்லாஹ், மெகபூபா முப்தி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது, பாஜக அரசு.

அரசியல் தலைவர்களை விட்டு சிறையில் அடைத்திருப்பது ஜனதாயகததிற்கு எதிரானது என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத பாஜக அரசு, நூறு நாட்களுக்கும் மேலாக வீட்டு சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க தற்போது புதிய திட்டத்துடன் செயல்பட்டுள்ளது.

அதாவது, கஷ்மிர் விவகாரம் குறித்து ஊடகத்திடமோ, மக்களிடமோ பேச மாட்டோம் என பத்திரங்களில் கையெழுத்திட்டு கொடுத்தால் மட்டுமே, வீட்டு சிறையிலிருந்து விடுவிப்பதாக, அரசியல் தலைவர்களிடம் பாஜக அரசு பேரம் நடத்தியுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க கஷ்மிர் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

Comments are closed.