LED விளக்கு அமைப்பதில் அமைச்சர் வேலுமணி ரூ.1,811 கோடி ஊழல்: அம்பலப்படுத்திய ஆர்டிஐ!

0

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள் (LED), தரை இணைப்பு (Earth Wire) அமைப்பதில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணி ஊழல் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழலின் அளவு சுமார் ரூ.1,811 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, ஊழல் செய்தவர்களை பதிவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க முன்னாள் எம்.எல் அப்பாவு.

Comments are closed.