CAAக்கு எதிர்ப்பு: சென்னையில் தடையை மீறி சட்டமன்ற முற்றுகை போராட்டம்

0

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சென்னை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் 6வது நாளாக தீவிரமான போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும்  ஏற்பட்டுவிடாமல் இருக்க சென்னை முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிய விசாரித்த உயர்நீதிமன்றம், இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தடை விதித்தது.

இதற்கிடையே, “எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், எந்த மாதிரி தாக்குதல் நடத்தினாலும், எங்களுடைய போராட்டம் தொடரும், இந்த கருப்புச் சட்டங்கள் கலைக்கப்படும் வரை எங்களுடைய போராட்டம் பல வடிவங்களில் தொடரும்” என இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டக்காரர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.