LIC பங்குகள் விற்பனையால் இந்திய பங்குச்சந்தை அதிகரிக்கும் -பாஜக அமைச்சர் அனுராக் தாக்குர்

0

வங்கிகளை இணப்பது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளர்கள் பேட்டியில் கூறியுள்ளதாவது:

வங்கிகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு  மேற்கொண்டுள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை தேவையின் அடிப்படையில் மத்திய அரசு மேலும் மேற்கொள்ளும். இந்திய பொருளாதாரத்தின் மதிப்பை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்த மத்திய அரசுக்கு இலக்கு உள்ளது.

எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையால், பொது மக்களின் பங்களிப்புடன் பங்குச் சந்தை அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு ரிசா்வ் வங்கி மேற்கொண்ட அத்தகைய நடவடிக்கையால் சுமாா் 5 லட்சம் நிறுவனங்கள் பலனடைந்தன என்று அனுராக் தாக்குா் கூறினாா்.

பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற வேடிக்கையான சட்டங்களால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல பெரிய தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகியவைற்றால் இதுவரை இல்லாத நிலைக்கு இந்திய சென்றுக்கொண்டிருக்கிறது.

Comments are closed.