பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது; ஒரு சகாப்தத்தின் முடிவோ: மம்தா பனர்ஜி கேள்வி?

0

2020 – 21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றும், 1956ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமுமான இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்.ஐ.சி.) நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

எல்.ஐ.சி. தனியாருக்கு விற்பனை செய்யவது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தொடர்ச்சியாக பொதுத்துறை நிறுவனங்களின் பாரம்பரியம் மற்றும் மரபின் மீது மத்திய அரசு நடத்தும் திடீர் திடீர் தாக்குதலை காண திகைப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இது ஒரு சகாப்தத்தின் முடிவோ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.