மேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு

0

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தேவையின்றி மக்கள் பொது வெளியில் நடமாடவோ, மாநிலங்களையும், மாவட்டங்ளையும் விட்டு மக்கள் வெளிவர கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இச்சூழலில், மேற்கு வங்க மாநிலத்தின் மெடினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவின் பவன் ஜனா என்பவர் கடந்த 17ஆம் தேதி கொல்லப்பட்டதற்கு மேற்கு வங்கத்தை ஆளும் அரசான திரிணாமுல் காங்கிரஸார்தான் காரணம் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், உயிரிழந்த பவன் ஜனாவுக்கு அஞ்சலி செலுத்திவதாக கூறி கட்சி அலுவலகத்தில் 150க்கும் மேற்பட்ட பாஜக உறுப்பினர்களை அழைத்து பாஜக தலைவர் திலீப் கோஷ் கட்சி கூட்டம் கூட்டியுள்ளார். இதற்காக காவல் துறையிடம் இருந்து உரிய அனுமதியும் பெறவில்லை.

ஊரடங்கு நேரத்தில் கட்சி கூட்டம் கூட்டி பரபரப்பாக்கிய திலீப் கோஷ் மீதும், அக்கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள இருவர் மீதும் மேற்கு வங்க போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பவன் ஜனாவின் கொலைக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.