ஊரடங்கு காரணமாக மோடியின் வாரணாசி தொகுதியில் மக்கள் உணவின்றியும், நிதியின்றியும் அவதிக்குள்ளாகி வருவதாக செய்தி வெளியிட்ட ஸ்க்ரோல் இதழின் சுப்ரியா சர்மா மீது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அடிப்படையில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியா மக்கள் தொகை அதிகம்வாய்ந்த நாடு என்றும், மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அடுத்தடுத்து வரக்கூடிய மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.
ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களின் வாழ்வாதரத்திற்கு உதவு நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. அதுவும் பிரதமர் மோடியில் சொந்த தொகுதியான வாரசியிலேயே அரசு உதவாமல் பெருமை அடித்து வருகிறது.
மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அவரால் தத்தெடுக்கப்பட்ட கிராமம் ஒன்றில் மக்கள் பட்டினி கிடக்கும் நிலை குறித்து ஸ்க்ரோல் இதழின் பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்.
இதனை பொறுத்து கொள்ள முடியாமல் உத்தர பிரதேச அரசு அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலி புகார்களை தயார் செய்து திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா மீது யோகி அதித்யநாத் அரசு வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.